காதலின் மீதியோ நீ-13

காதலின் மீதியோ நீ-13

காதலின் மீதியோ நீ-13

நித்ராவுக்கு வந்தக்கோபத்தில் ஆயுஷின் கன்னத்தில் பளாரென்று அறைந்தாள்.அதை வாங்கிக்கொண்டவன் அவளது முடிக்குள் தனது கையை நுழைத்து இழுத்துப் பிடித்தவன் அவளது கையை எடுத்து முத்தம் வைத்தான்.

“சீச்சீ விடு என்னை.இன்னோரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கபோறவன் என் வாழ்க்கையை இப்படி கெடுத்துட்டியேடா? நீயெல்லாமா மனுஷனே இல்லை. உனக்குத்தான் என்னைய பிடிக்காதே .நான்தான் உன் அந்தஸ்த்துக்கு ஏத்தவள் இல்லையே.அப்புறம் எதுக்குடா என்னை இப்படிப் பண்ணின. நீயென்ன ப்ளேபாயா? உனக்குப் பிடிச்சவளை அவள் அனுமதியில்லாமலே எடுத்துக்கிறதுக்கு. ச்சீ உன்னைப் பார்த்தாலே எனக்கு அருவறுப்பா இருக்குது எழுந்துப்போடா!”என்று அவனை அடித்தாள்.

அவளிடம் அடியை வாங்கியவன் மீண்டும் அவளை இழுத்து அணைத்துக்கொண்டான்.

நித்ரவோ அவனிடமிருந்துத் திமிறியவள் “விடுடா என்னை இதுக்குமேல என்னைத் தொட்டா கொன்றுவேன்டா என்று சீறினாள்”அவனோ அவளை நிதானமாகக் கையாண்டான்.

“நித்து இங்கப்பாரு உன்கிட்ட நிறையப்பேசி ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாமான்னு கேட்கத்தான் கதவையெல்லாம் பூட்டினேன். ஏற்கனவே எனக்கு எங்கேஜ்மெண்ட் முடிஞ்சிதுன்னு நீ நம்பிட்டு என்மேல கோபமா இருக்க.அதுதான் பேசிப்புரிய வைக்கலாம்னு வந்தேன். அதுக்குள்ள நீயும் பேசியதையெல்லாம் கேட்டு எனக்கும் மூடாகி இப்படி நடந்து போச்சு

இதுக்கு நான் மட்டும் பொறுப்பு இல்ல நீயும் சேர்ந்துதான் பொறுப்பு .நீ எதுக்கு என் பேச்சை கேட்காம ஏகிறிப் பேசின அதுதான் கோவத்துல அப்படி பண்ணிட்டேன் என்று அவன் செய்த தப்பிற்கும் அவள் மேலே பழியைப் போட்டான்.

“என்னது எல்லாம் என்னால ஆயிட்டா? அடிங்க மவனே. நான் எவ்வளவு கெஞ்சினேன் விட்றுன்னு விட்டியாடா எல்லாத்தையும் முடிச்சிட்டு இப்போ வந்து என்னாலதான் என்னை எடுத்துக்கிட்டேன்னு சொல்லுற” என்று அவனது கழுத்தைப் பிடித்து நெறித்தாள்.

அவளது கைகள் இரண்டும் கழுத்தில் சும்மாதான் இருந்தது. அவள் அழுத்திக்கூடப் பிடிக்கவில்லை. எங்கே அவனுக்கு வலிச்சிடுமோ என்ற ரீதியில்தான் கையை வைத்திருந்தாள்.

அவளது கையை எடுத்துவிட்டவன் நித்ராவைத் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு அப்படியே பின்னாக சரிந்துப்படுத்தான்.

அவனது அமைதி அவளை என்னவோ செய்ய அவனிடமிருந்து விலகி எழுந்தவள் அப்படியே தனியாக உட்கார்ந்து சத்தமாக அழுதாள்.

அவளது அழுகையின் சத்தம் கேட்டுக் கண்ணைத் திறந்துப் பார்த்தவன் மீண்டும் கண்களை மூடிக்கொண்டான்.

நித்ரா அழுது முடித்துவிட்டு எழுந்து வெளியே போக கதவைத் திறந்தாள்.

ஆயுஷோ கண்களை மூடியவாறே “நான் வேண்டாம் என் காதல் வேண்டாம் என்று முடிவு எடுத்திருந்தன்னா அப்படியே போயிடு. இப்போ போயிட்டன்னா இதுக்குமேல என்னை நீ பார்க்கவே முடியாது.நான் வேணும் என் காதல் வேணும் என்கூட வாழணும்னா என் பக்கத்தில் வா”என்றான்.

அதில் கோபம் வந்து திரும்பி வந்தவள் அவன்நெஞ்சில் கைவைத்து அழுத்தி ”உனக்கும் எனக்கும் எப்போடா காதல் இருந்துச்சு? நீதான் என்கிட்டக் காதலைச் சொல்லவேயில்லையே.

உனக்குன்னு உங்கப்பா பணக்கார பொண்ணா பார்த்து நிச்சயம் பண்ணி வைச்சிருக்காருன்று லட்டுதான் வந்துச்சு.உன் காதல் எதுவும் என்கிட்ட வரல.இப்போ திடீர்னு காதல்ங்குற என்ன நினைச்சிட்டிருக்கடா உன் மனசுல?”என்று கோபத்தில் கத்தினாள்.

“உன்னைத்தான் நினைச்சிருக்கேன், உன்னை மட்டும்தான் நினைச்சிருக்கேன். உன்னைத்தான்டி எனக்குள்ள எவளும் வரமுடியாதுன்னு புரிஞ்சிருக்கேன்.அதனால்தான் உனக்குள்ள நான் நுழைஞ்சிட்டேன்”

“என்ன?என்னை மட்டும்தான் நினைச்சிருக்கியா?அ ப்போ எப்படிடா உனக்கு எங்கேஜ்மெண்ட் நடந்துச்சு?”என்று அவன் தலைமுடியைப் பிடித்து ஆட்டினாள்.

ஆனானபட்ட ஆயுஷ் நிலமை இப்படியாகணும். தன்னை யாரும் தொட்டாலே அவ்வளவு கோபம் வரும். ஒருத்தி அவன் முடியைப்பிடிச்சு ஆட்டுறா சுகமா அவள் கையைப்பிடிச்சுட்டு நின்னுக் கொடுக்கிறான்.இந்த மானங்கெட்டக் காதல் உனக்குத் தேவையா ஆயுஷ்?

“லூசா நீ எங்கேஜ்மெண்ட்லாம் ஒன்னும் நடக்கல. ஏற்கனவே சின்னவயசுல பேசினது. பிரீத்தா கல்யாணத்தோடு பெரியவங்க பேசிக்கிட்டாங்க. நான் கண்டுக்கல .நான் என்ன கனவா கண்டேன் இப்படி ஒரு தமிழ்காரிக்கிட்ட வசமா சிக்குவேன்னு.அந்தப் பேச்சை இப்போவும் தொடங்கி அவங்களே முடிச்சிட்டாங்க.அதுக்குத்தான் டாடீ ஸ்வீட் கொடுத்தாரு.நானும் நம்ம ஸ்டேட்டஸ்தான் முக்கியம்னு சும்மா இருந்தேன்”

அவ்வளவுதான் காளியாக உருவெடுத்த மாதிரி அவனை முறைத்துவிட்டு அவனை எதைக்கொண்டு அடிக்கலாம் என்று தேடினவளின் கையைப்பிடித்து இழுத்து தன் நெஞ்சில் போட்டவன் அப்படியே கட்டிக்கொண்டு உருண்டான்.

அவளுக்கோ அழுகையும் ஆத்திரமும் சேர்ந்து ஒருசேர வந்தது.ஆனால் அதை அடக்கிக்கொண்டு அவனிடமிருந்து விடுபட அவனோடு சேர்ந்து உருண்டாள்.

அதை உணர்ந்தவன் நித்ராவை இன்னும் இறுக்கி அணைத்துப்பிடித்து அவளது கன்னத்தைக் கடித்து வைத்தான்.

அதற்குமேல் தாங்கமுடியாது மீண்டும் அழுதாள்.அவளது அழுகை அவனை என்னவோ செய்தது. அவளது காதோரம் விழுந்த முடிகளை அப்படியே தனது விரல்களால் ஒதுக்கிக்கொடுத்து அவளது காதுமடல்களைப் பிடித்துத் தடவிக்கொடுத்தான்.

“ப்ளீஸ் அழாத நித்து.எனக்குக் கஷ்டமா இருக்கு. நீ அழறதைப் பார்க்கக்கூட விரும்பல நான். உண்மையாவே கஷ்டமா இருக்கு”

“அப்புறம் ஏன்டா இப்படி செய்த. எதுக்கு என்னை இப்படி அவசர அவசரமா எடுத்துக்கிட்ட. கல்யாணத்துக்கு முன்னாடியே யாராவது இப்படி காதலிக்கிறவங்கக்கூட வாழ்வாங்களா. என்னைப் பத்தி என்ன நினைச்சிக்கிட்டு இப்படி பண்ணின? இவளுங்க பணத்துக்கு மயங்கி நம்மக்கூட படுப்பாளுங்கன்னா” என்று கேட்டவளுக்கு தாங்கிக்க முடியாது மீண்டும் பெருங்குரலெடுத்து அழுதாள்.

அவளது அழுகையை வெளியே கேட்காதவாறு வாயை தனது கையால் அடைத்தான்.அவளோ அவனது கையைத் தட்டிவிட்டாள்.

இது வேலைக்காகாது என்று வேகமாக அவளது தாடையைப்பற்றி இழுத்தவன் அப்படியே அவளது வாயோடு வாய் வைத்து அடைத்தான்.

“டேய் என்னடா பண்ற? மறுபடியும் முதல்ல இருந்தா?”என்று அவனது சட்டையைப் பிடித்து கிழிப்பதற்கு முயன்றாள்.

அதெல்லாம் அவனுக்கு துஜ்ஜிபி போல,மற்றொரு கையால் அவள் கழுத்தோடு முதுகில் கைப்போட்டுப் பிடித்து தன் நெஞ்சோடு வைத்து அழுத்தினான்.

முதலிலாவது ரொம்ப மருண்டு முரண்டுப்பிடித்தாள். இப்போது அவனே அவளுக்கு எல்லாமாகிப் போக கோபமும் வருத்தமும் அவளை பலவீனப் படுத்தியிருந்தது.அதைவிட அவன்தான் தனக்கு எல்லாம் என்பதை உணர்ந்தவளின் உடலும் மனமும் தானாகவே பலமிழந்திருந்தது.

அவன் அவளது வாயிற்குள் தனது வாயை வைத்து உறிந்து முத்தமிடுகிறேன் என்னு அவளது உயிரை தனக்குள் ஏற்றுக்கொண்டிருக்கிறான்.

இப்போது தனது நெஞ்சில் படுத்திருந்தவளை சரிந்து தரையில் போட்டு அவன் அவள்மேல் சரிந்துக்கொண்டான்.

தனது கண்களை விரித்து நித்ரா ஆயுஷைப் பார்த்தாள்.அவனும் அதே நேரம் கண்களைத் திறக்க இருவரது கண்களுமே தங்களது முத்தத்தை கண்கள் வழியாகப் பரிமாறிக்கொள்ள விழைந்தது.

பார்வைகள் இரண்டும் முத்தமிட்டுக்கொண்டன.

இந்தளவுக்கு அவனது பார்வை தன்னை பாதிக்கும்.தனது நெஞ்சுக்குள் ஊடுருவும் என்று அவள் யோசிக்கவேயில்லை.

தன் பார்வையாலே அவளைப் பருகியவனின் காதல் தாகம் அவன் கண்களில் நன்றாகத் தெரிந்தது.அது காதல் தாகமில்லை தாபமும் கூட என்று புரிந்தது.

இருவரும் அப்படியே அமைதியாக பார்த்திருக்க ஆயுஷ் அவளது கண்ணில் முத்தம் வைத்தான்.நித்ரா கண்களை மூடவும் அவள் கண்களில் நிறைந்த கண்ணீர் அப்படியே அவளது கண்களின் ஓரம் வழிய அதைப்பார்த்து தனது உதட்டால் துடைத்தான்.

“நீ என்னை விட்டுட்டுப் போயிடுவல்ல. உன் அந்தஸ்த்து பணம் அது இதுன்னு சொல்லி என்னை விட்டுட்டுப்போயிடுவல்ல. அப்புறம் எதுக்கு என்னை இப்படி பண்ணின?”

“யாரு சொன்னா உன்னை விட்டுட்டுப் போயிடுவேன்னு.நீயே போனாலும் நான் விடமாட்டேன்.இந்த ஜென்மத்துல நீதான் எனக்கு மனைவி. இல்லைன்னா யாரும் என்னருகில் நெருங்கவே முடியாது,அதுதான் உண்மை”

“அப்போ அக்லி சாக்லேட்டுன்னு சொன்னியே?”

“ப்ச்ச் அப்போ கோபத்துல சொன்னதுமா.நானே அதை மறந்துட்டேன்.நீ எதுக்கு அதை ஞாபகப்படுத்துற?”

கோபத்துல சொன்னதா?யோவ் கோபத்துல என்ன வேணும்னாலும் சொல்லுவியா?இங்க வலிக்குது பணம் இல்லன்னா இப்படித்தான் அசிங்கப்படுத்துவியா?”

“ப்ச்ச் என் குணம் அப்படியாயிற்று நான் என்ன பண்ண?”

அப்போ நீ இன்னும் திருந்தல. நாளைக்கு உன்கூட வாழும்போது இதைத்தானே நீ சொல்லவ.எனக்கு நீ வேண்டாம் போ”என்று அவனைத் தள்ளிவிட்டாள்.

“அப்படியெல்லாம் சொல்லி உன்னைக் காயப்படுத்தமாட்டேன்டி. இது உன் மேல ப்ராமிஸ்டி. என் வாழ்க்கையே நீதான். உன்னை எப்படிக் காயப்படுத்துவேன் சொல்லு”

“உன்னை நம்புறதுக்கில்லை. வா இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம். முதல்ல என் கழுத்துல தாலிக்கட்டு அப்புறமா வாழ்றதைப் பத்தி யோசிக்கலாம்”

“ஏய் என்ன தாலிக்கட்டச் சொல்லுற.இரு கொஞ்சம் பொறுமையா.உடனே எதுவும் பண்ணமுடியாதுல்ல.என்னைக்காக இருந்தாலும் நான்தானே உன் கழுத்துல தாலிக்கட்டப்போறேன்”

“எனக்கு உன் மேல நம்பிக்கையில்லை.நான் உன்பேருல கேஸ் கொடுத்து தாலிக் கட்டவைப்பேன் பாரு”என்று ஆவேசமாக எழுந்தாள்.

இவ ஒருத்தி வாடி இங்க என்று அவளது ட்ரஸ்ஸைப் பிடித்து இழுத்து உட்காரவைத்தான்.

“போலீஸ் ஸ்டேஷன் போனா இது ரேப் கேஸாகிடும்.அப்புறம் என் மானம் மரியாதை போனப்புறம் என்கூட வாழ்றதுக்கு வருவியா. அறிவா யோசிக்க மாட்டியா என்ன?”என்றவன் அவளது தோளில் கைவைத்து மெதுவாக தடவியவாறே பேசினான்.

இங்கப்பாரு என் குடும்பம் பெரிய குடும்பம்.இப்படிக் காதலிக்கிறேன்லாம் போய் நிக்க முடியாது அதுக்கு வேற வழியைத்தான் பார்க்கணும். போலீஸ் ஸ்டேஷன் போக முடியாது கமிஷனர் யாருன்னு தெரியுமா எங்க மாமா தான் அதனால அமைதியா உட்காரு நான் என்ன பிளான் பண்றேன்னு அதன்படி நீயும்வா சரியா என்று அவளை சமாதானப்படுத்தினான்.

அவளுக்கு கமிஷனர்தான் அவங்க மாமா என்றதும் ‘இது என்னடா புது கதையா இருக்கு. அப்போ இவன பிரச்சனை கேஸ் கொடுத்தா கூட எதுவும் பண்ண முடியாதா?’

அவளது யோசனைகள் உள்வாங்கியவன் “ரொம்ப யோசிக்காத.போலீஸ் கேஸ்லாம் என்மேலக் குடுத்தா நல்லதுன்னு அங்க வைச்சே கல்யாணம் பண்ணிப்பேன் புரியுதா. என்னை நம்பு” என்று அவளது கையை பிடித்துக் கொண்டு சத்தியம் பண்ணாதக் குறையாக நம்பவைத்தான்.

இன்னும் முழுதாக நம்பவில்லை என்றாலும் அவனை அரைகுறையாக நம்பியவள் சரியென்று தலையாட்டினாள்.

அதைப்பார்த்தவன் மெதுவாக ஆடும் அவளது தலையைப்பிடித்து இழுத்து தன் நெஞ்சுக்குள் வைத்துப்பிடித்துக்கொண்டான்.

அவ்வளவுதான் அடுத்தும் அவளது தலையில் முத்தம் வைத்தவன் அவளது கைகளை எடுத்துத் தனது தோளில் போட்டு காதில் ரகசியமாகப் பேசினான்.

“ஏய் நித்து ஐ லவ் யூ” என்று ஹஸ்க்கி வாய்ஸில் சொன்னான்.

என்னது வெள்ளக்கரடி வாயிலிருந்து ஐ லவ் யூவா ?என்று கண்களை பூவாய்விரித்து வாயைப்பிளந்தவாறே அவனது வாயையே நம்பாமல் பார்த்திருந்தாள்.

அப்படி அவள் அதிர்த்துப் பார்க்கும்போது கொள்ளையழகில் மிளிர்ந்தாள்.அவ்வளவுதான் அவளை வாரியணைத்து எதுவுமே பேசாது முத்தங்களால் மட்டுமே பேச ஆரம்பித்தான்.

என்னது மறுபடியும் முதல்ல இருந்தா என்று அதிர்த்தவள் வேண்டாம் ஆயுஷ் என்று கெஞ்ச வேணும் நித்து என்று அவன் மிஞ்ச ஆகமொத்தம் அடுத்த முறையும் அவனிடம் தன்னை இழந்தாள்.

ஆயுஷுக்கு ஏதோ மலையைப்புரட்டி சாதிச்ச மாதிரியே இருந்தது.

எல்லாம் சரிதான் வாழ்க்கை நம்ம நினைச்ச மாதிரியே அமையாதே அமையாதே!அப்படி அமைஞ்சிட்டா அது வாழ்க்கையே இல்லையே!

இதெல்லாம் புரியாது அந்த பெரிய பிஸெனெஸ்மேன் நித்துவிடம் அடிசறுக்கி விழுந்திருந்தான்.

அதிலிருந்து மீண்டெழும்போது அவன் அவனாக இருப்பானோ?